மசூதி அருகே குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் 4 போலீசார் பலி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      உலகம்
Pakistan bomb blast 2019 05 14

கராச்சி, பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 4 போலீசார் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலம் தலைநகரான குவெட்டாவில் உள்ள சாட்டிலைட் நகரில் உள்ள மசூதி அருகே நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் 4 போலீசார் உடல்சிதறி பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விசாரணையில், ரிமோட் மூலம் குண்டு வெடிக்கச் செய்துள்ளது தெரியவந்தது. பலுசிஸ்தானில் கடந்த 3 நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் நட்சத்திர ஓட்டலில் நுழைந்து தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து