மகளை கண்காணிக்க வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்த தந்தை

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      உலகம்
 dog daughter 2019 05 14

பெய்ஜிங், சீனாவில் பள்ளி பாடம் எழுதும் மகளை கண்காணிக்க, தந்தை ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்துள்ளார்.

சீனாவின் தென்மேற்கு பகுதியான குய்சோ மாகாணத்தில், வசித்து வரும் சூ லியாங் என்பவர் பான்டன் என்று பெயரிட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். தனது மகள் பள்ளி பாடங்களை ஒழுங்காக செய்யாமல், செல்போனில் நேரம் செலவிடுவதை அறிந்த லியாங், தனது வளர்ப்பு நாயை கொண்டு அவளை கண்காணிக்க முடிவு செய்தார். அதன்படி, மகள் பள்ளிப் பாடம் எழுதும் போது, அவளது டேபிளின் மேல் கால்களை வைத்து நின்றபடி கண்காணிக்க வளர்ப்பு நாய் பான்டனுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். சிறுமியை பாடம் எழுதும் போது மட்டுமல்லாமல், பியானோ வாசிக்கும் போது, அவளது கவனம் வேறு எதிலும் செல்லாதபடி பான்டன் ஆசிரியர் போல் கண்காணித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து