மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் கமலின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் - தூத்துக்குடியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      தமிழகம்
rajendra balaji interview 2019 05 14

ஓட்டப்பிடாரம் : மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் கமல்ஹாசனின் பிண்ணனி குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தூத்துக்குடி தனியார் விடுதியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது,

ஒரு சமுதாய சீர்கேட்டை உருவாக்கும் வகையில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் கமலஹாசன் பேசி வருகின்றார். என்னை பதவி விலக சொல்வதற்கு கமல்ஹாசன் கட்சி ஒன்றும் ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. நான் எங்கும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசவில்லை. இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என்பதை கமல்ஹாசன் எப்படி சொல்லலாம். இலங்கையில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவன் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தன் பிள்ளைகள் செத்தால் கூட கவலைப்படுவதில்லை. அந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளனர். ஒரு மதத்தை கூறி தீவிரவாதம் என்று யார் சொல்வதையும் அனுமதிக்க முடியாது. தீவிரவாதிகள் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு குறிப்பிட்ட ஒரு மதம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. எல்லா மதத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கைக்கும், தமிழகத்திற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. அங்கு ஒரு பாதிப்பு என்றால் கூட தமிழகத்தில் வலி எடுக்கும். இலங்கையில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என்று கமலஹாசன் கூறியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

சுதந்திரத்துக்குப் பிறகு முகமது அலி ஜின்னா தலைமையில் ஒரு குழுவும், மகாத்மா காந்தி தலைமையில் ஒரு குழுவும் சேர்ந்து பேசி சுமூக முடிவு ஏற்படும் போது எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர். எத்தனை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இது கமலஹாசனுக்கு தெரியுமா? நமது இரு பிள்ளைகளும் இப்படி கொல்லப்படுகிறார்கள் என்று நினைத்து வாகா எல்லை கண்ணீர் விட்டு அழுதது. இதையெல்லாம் பார்த்து பார்த்து மதக் கலவரங்களும் குறைந்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமலஹாசனின் இந்த கருத்து இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலை. இது போன்ற செயல்களை அவர் செய்யவும் கூடாது. பேசவும் கூடாது. கமலஹாசன் யாரை திருப்திப்படுத்த இந்தியாவின் பயங்கரவாதம் முதல் இந்து என்று கூறினார். ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிக் கொண்டு பேசுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இரு மதத்தையும் சண்டை இழுத்து விட நினைக்கின்றார். கமல்ஹாசனை மத்திய உளவுத்துறை கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.

இஸ்லாமியர்களை நான் இப்போது கூட அப்பு மார்கள் என்றுதான் உறவைச் சொல்லி கூப்பிடுவேன். தூத்துக்குடியில் நாலுமாவடியில் மோகன் லாசரை பார்த்து நான் ஆசி பெற்று தான் வந்துள்ளேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய நடத்தும் நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக கலந்து கொண்டுள்ளேன். கமல்ஹாசன் பேசும் போது யாராவது ஒருவர் நீ பார்த்தாயா என்று தட்டிக் கேட்டிருந்தால் என்னவாயிருக்கும். அங்குதான் தீவிரவாதம் உருவாகி வருகிறது. அங்குதான் பிரச்சினை உருவாகும். கலவரம் உருவாகும். மதவாதத்தை தூண்டி விடும் கமல்ஹாசன் பின்னணியை மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும். ஒரு வேகத்தில் பேசி விட்டேன் என்று கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தால் நான் சொன்ன கருத்தையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். யாரையும் துன்புறுத்த வேண்டும். மனது புண்படும்படி பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. மக்களின் கோபங்கள் எப்படி வெளிப்படும் என்பதைத் தான் நான் கூறியிருந்தேன். அவர் திருந்துவதற்காகத்தான் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தினேன். இந்துகள் வருத்தப்பட வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தால் நான் வாபஸ் பெறுகின்றேன். நான் பேசியதை அவருக்கு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவற அராஜகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்து மதத்தை பேசியது போன்று வேற ஏதாவது ஒரு மதத்தை கமல்ஹாசன் இப்படி பேச முடியுமா? இந்துவையும் இந்து மதத்தையும் வம்புக்கு இழுப்பதை சில கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க.வில் சில பேச்சாளர்கள் என அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசனும் சேர்ந்து இருக்கின்றார். தேர்தல் வந்தால் திருச்செந்தூரில் சென்று சாமி கும்பிடுகின்றனர். சிவன் கோயில் சென்று சாமி கும்பிடுகின்றனர். திருநீறு, குங்குமம் வைக்கின்றனர். பிறகு எதற்கு யாரை திருப்திப்படுத்த இந்து மதத்தை அவமரியாதையாக பேசுகின்றனர். ஏழைகளுக்கு உதவக் கூடியவர்கள் கடவுள் என்றுதான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. கமல்ஹாசன் பேசியதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அழகிரி இந்தியாவில் வாழத் தகுதியற்றவர். அவர் இத்தாலி நாட்டிற்குத்தான் போக வேண்டும். இந்துகளை அவமரியாதையாக பேசி விட்டு அதை ஆதரித்து பேசுவது முட்டாள்தனம். இந்து பெண்கள் புனிதமாக போற்றும் தாலியை அறுத்து வீடியோ வெளியிட்டு வரும் வீரமணி அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் அடக்கி வைக்கும் நிலை ஏற்படும். நான் பேசியது எதையும் சட்டத்திற்கு விரோதமாக பேசவில்லை.. ஒரு மேடையில் சாதாரண ஒருவர் பேசினால் அது பெரிய செய்தியாக வராது. கமல்ஹாசன் நடிகர் என்பதால் அவரது பேச்சு பெரிதாக பேசப்படும். கமல்ஹாசனி தவறான பேச்சை கண்டிக்காவிட்டால் அவர் பேசிக் கொண்டே இருப்பார். என்னிடம் சில இஸ்லாமிய, கிறிஸ்தவ தலைவர்கள் பேசினார்கள். என்னுடைய கருத்தை அவர்கள் வரவேற்றனர். எல்லா மதத்திலும் மத ஆர்வலர்கள் இருப்பார்கள். அவர்களை தூண்டிவிடும் வகையில் கமல்ஹாசன் பேசக்கூடாது. நாக்கை நான் அறுப்பேன் என்று கூறவில்லை. நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்றுதான் கூறினேன். கமல்ஹாசனின் பேச்சு நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். சமூக நல்லிணகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டிவிடும். அதைத்தான் நான் கண்டித்தேன். அமைதியாக நடைபெறும் தேர்தலை மட்டுமல்ல, அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் உள்ள கமல்ஹாசனின் பேச்சை அனைவரும் கண்டிக்க வேண்டும். எடப்பாடியார் ஆட்சியில் மதநல்லிணக்கமான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரிவினவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும் கமல்ஹாசனின் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். கமல்ஹாசன் தனி வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர். அவரைப் பற்றி நிறைய குற்றச்சாட்டு வைக்கலாம். அரசியலுக்கு வர அவருக்கு தகுதி கிடையாது. ஸ்டாலின் ஒரு அரசியல் பச்சோந்தி. அவரை நம்பி சென்றவர்களை நட்டாற்றில் விட்டு சென்று விடுவார். ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார். தற்போது பாரதிய ஜனதாவின் 2-ம் கட்ட தலைவர்களோடும் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். எந்த எம்.பி. தொகுதியிலும் தி.மு.க. ஜெயிக்க முடியாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து