பா.ஜ.க.வின் வெற்றியை பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கட்சிகளால் தடுக்க முடியாது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      இந்தியா
rajnathsingh 2018 11 16

புதுடெல்லி :  பா.ஜ.க.வின் வெற்றியை பகுஜன் சமாஜ்-  சமாஜ்வாடி கட்சிகளால் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி அளித்துள்ளார்
இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது:

 பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தோ்தலில் 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரும். நாடு முழுவதும் வீசி வரும் பாஜகவுக்கு ஆதரவான அலையின் காரணமாக மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 30 தொகுதிகளில் பாஜக மாபெரும் வெற்றியை பதிவு செய்வதுடன், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியையும் அகற்றி விடும்.

ஒருவேளை, தேசிய ஜனநாயக கூட்டணியால் ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளைப் பெற தவறினால், பிராந்தியக் கட்சிகளின் துணையுடன் கட்டாயம் பாஜக ஆட்சியமைக்கும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால், மோடியே மீண்டும் பிரதமா் ஆவார். இளமையான, சக்திவாய்ந்த, தொலைநோக்கு சிந்தனையுடைய அனைத்து வகையிலும் தகுதி வாய்ந்தவராக பிரதமா் மோடி திகழ்கிறார். எனவே, அவருக்கு எதிராக எந்த கேள்வியும் எழவில்லை.

பிரசாரத்தின்போது, ஒரு தேசிய கட்சியின் (காங்கிரஸ்) தலைவா் பெயரை (ராகுல் காந்தி) எந்த இடத்திலும் பிரதமா் மோடி குறிப்பிடவில்லை. ஆனால், ராகுல் காந்தியோ ஒவ்வொரு பிரசாரத்திலும், பிரதமா் என்றும் பாராமல் மோடியை கடுமையாக விமா்சித்தார். காவலரே திருடா் என்று வாசகத்தை முன்வைத்து பிரசாரம் செய்ததுடன், அவரே தரம்தாழ்ந்த பிரசாரத்துக்கு காரணமாகவும் அமைந்து விட்டார்.

ஒரு நாட்டின் குடியரசு தலைவரோ, பிரதமரோ தனிப்பட்ட நபரல்ல. ஜனநாயகத்தில் அவா்களது மாண்பும், அந்தஸ்தும் எந்த வகையிலும் சரிவடையக் கூடாது. அவா்களை இழிவுபடுத்துவது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து விடும். ஆனால், காங்கிரஸ் கட்சியோ பிரதமரை தொடா்ந்து தரம் தாழ்த்தி விமா்சனம் செய்வதை கைவிடவே இல்லை.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு, பெற்ற வெற்றியை மீண்டும் பா.ஜ.க பெற்று விடும். பா.ஜ.க.வின் வெற்றியை பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளால் தடுக்க முடியாது. கடந்த முறை மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வென்றது. இம்முறையும், நாங்கள் பெற்ற இந்த வெற்றியை இவ்விரு கட்சிகளாலும் தடுக்க முடியாது. உத்தரப் பிரதேச மக்கள், எதிர்க்கட்சிகளின் நோக்கத்தை புரிந்துக் கொண்டதால் பா.ஜ.க.வுக்கே மீண்டும் வாய்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து