காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தாவுவதற்கு தயாரான தி.மு.க. அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      தமிழகம்
jayakumar 2019 02 02

சென்னை : தேர்தல் முடிவுகளுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தாவுவதற்கு தி.மு.க. தயாராகி விட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார். 

தலைகுனிவார்கள்...

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அலை வீசுகிறது. ஸ்டாலின், தினகரன், சிதம்பரத்தால் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. ஜெயலலிதாவை தினகரன் இன்று குறைகூறிப் பேசுகிறார். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அ.ம.மு.க.வை ஏற்க மாட்டார்கள். தி.மு.க., காங்கிரஸ் கட்சியை எப்படி விமர்சனம் செய்தது என்று நினைத்து பார்க்க வேண்டும். உண்மையில் காங்கிரஸ் கட்சியினர் இதனை நினைத்து பார்த்தால் இப்படிப்பட்ட படுபாதகர்களோடு இருக்கிறோமே என்று வெட்கி தலைகுனிவார்கள். அந்த அளவுக்கு கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். அதன் பிறகு நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று சொன்னார்கள். அதன் பிறகு கூடா நட்பு. கேடாய் முடியும் என்றார்கள்.

கொள்கை கிடையாது...

மதவாதக் கட்சி, மதத்தைச் சார்ந்து இருக்கும் கட்சி என்று பா.ஜ.க.வைக் கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்கிறது. ஒருகாலத்திலும் அவர்களோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்கள். பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்து பல்வேறு துறைகளைப் பெற்று வளம் அடைந்தார்கள். இது போன்று தான் அவர்களுடைய பழைய வரலாறு உள்ளது. தி.மு.க.வைப் பொறுத்தவரை அரசியல் கொள்கை என்பது அவர்களுக்கு கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஒரே லட்சியம் பணம், பதவி. அதற்காகத்தான் இன்று பலருடன் பேசி வருகிறார்கள்.

ஒரு படகில்தான் சவாரி செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் மூன்று படகில் சவாரி செய்பவரை பார்க்க முடியுமா? அந்த திறமை உண்மையிலேயே ஸ்டானுக்குதான் உள்ளது. வேறு யாருக்கும் கிடையாது. காங்கிரஸ், பா.ஜ.க., சந்திரசேகர் ராவ் என மூன்று படகுகளில் தி.மு.க. சவாரி செய்கிறது. பா.ஜ.க.வுக்கு டில்லியில் இருந்து மருமகன் மூலம் தூது விடுகிறார்கள் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். ஒருவேளை நாங்கள் வெற்றி பெற்றால் ( தி.மு.க.) எங்களுக்கு 5 மந்திரி பதவி வேண்டும் என்று பேசுகிறார்கள். இதனைத் தமிழக பா.ஜ.க. தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மறுப்பு தெரிவித்தாரா?

சந்திரசேகர் ராவ் பேசியது குறித்து ஸ்டாலின் ஏதாவது தெரிவித்தாரா? அல்லது நான் குறிப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்தாரா? இல்லை. எனவே மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகம் அவர்கள் ( தி.மு.க.) மனதில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும். தமிழகத்தில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். அரசைப் பொறுத்தவரை வீதியில் நின்று குறைத்தாலும் அரசை தொட்டு பார்க்க முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. அலைதான் வீசுகிறது. நாங்கள் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம். யாராக இருந்தாலும் நாக்கு இருக்கிறது என்பதற்காக பேசக் கூடாது. மனிதநேயத்துடன் பேச வேண்டும். மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து