முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் இன்று ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னைக்கு இன்று வருகை தந்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

மாதிரி பயிற்சி....

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாதிரி பயிற்சியும் அளிக்கப்பட இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

45 மையங்களில்...

பாராளுமன்ற தேர்தல், 18 சட்டசபைகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளன. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23-ம் தேதி எண்ணப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 45-க்கும் அதிகமான வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

வாக்கு எண்ணும்...

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்திலும் இது போன்ற முறையில் முதன் முதலாக வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. புதிய முறையில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ள சூழ்நிலையில் அது குறித்த ஆலோசனைகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அளிக்கப்படவுள்ளன.

பயிற்சி வகுப்புகள்...

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனைகள் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் இன்று சென்னை வரவுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை ஆணையர் சந்தீப் சக்சேனா, துணை ஆணையர் சுதீப் ஜெயின் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழகத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கவுள்ளனர். ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் உள்ள வாக்குகளையும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் ஒருசேர எண்ணுவது தொடர்பான மாதிரி பயிற்சி வகுப்பும் சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாதிரி பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் காலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பிறகு பிற்பகலில் செய்முறை வகுப்பு நடத்தப்படவுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறை ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவதால் வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்து முடிவுகளை அறிவிக்க கூடுதல் நேரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து