முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23-ல் புதிய ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கும் சோனியா

புதன்கிழமை, 15 மே 2019      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்த மே 23-ம் தேதி சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு வருகிற 19-ம் தேதியுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது.272 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். இல்லையெனில் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் உருவாகும். வருகிற 23-ம் தேதி 542 தொகுதிகளின் ஓட்டுக்களும் எண்ணி முடிவு அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வந்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக தனது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜ.க. பக்கம் செல்லாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் சோனியா ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் வருகிற 23-ம் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று அந்த அழைப்பில் சோனியா குறிப்பிட்டுள்ளார். இதற்கான சோனியாவின் அழைப்பு கடிதம், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 23-ம் தேதிதான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அன்றைய தினம் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்று திரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து