6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை பெற்றுவிட்டோம் - அமித்ஷா

புதன்கிழமை, 15 மே 2019      இந்தியா
amit shah 2019 02 02

Source: provided

 புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் 6ம் கட்டத்திலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுவிட்டோம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 7-வது கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 இடங்களில் பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறவேண்டும்.

இந்நிலையில், 6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 5 மற்றும் 6-வது கட்ட தேர்தலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெற்றுவிட்டோம்.

7வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து