திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்ட விழா

புதன்கிழமை, 15 மே 2019      திண்டுக்கல்
15 dgl

திண்டுக்கல் - திண்டுக்கல் ஸ்ரீ அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்ட திருத் தேர் வெள்ளோட்ட விழா நாளை மறுதினம் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

உலக பிரசித்தி பெற்ற திருக்கோயில் திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆகும். இங்கு வருடந்தோறும் அம்மனுக்கு மாசி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வர். கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறக்கூடிய இத்திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட மக்கள் மண்டகப்படி நடத்துவார்கள். அதில் குறிப்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வர்த்தகர்கள் சங்கம் இணைந்து மண்டகப்படி  சிறப்பாக நடைபெறும். இந்நாளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் நகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அம்மனுக்கு மரத்திலான தேர் உருவாக்குவது என இச்சங்கங்கள் முடிவெடுத்து தயார் செய்து தற்போது திருத் தேர் வெள்ளோட்ட விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேர் கமிட்டி நிர்வாகி மங்களம் சி. அழகு தெரிவிக்கையில்,
ஸ்ரீ கோட்டை மாரியம்மனுக்கு மரத்திலான திருத்தேர் செய்வதென முடிவு எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பணியாற்றி திருத்தேர் தயாராகி உள்ளது.ரூ 22.50 லட்சம் மதிப்பீட்டில் 30 டன் எடையும் 12 1/4அடி நீளமும், 12 அடி அகலமும், 31 1/4 அடி உயரமும், மற்றும் 300க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இத் திருத் தேரில் வெள்ளோட்ட விழா நிகழ்ச்சி நாளை 16ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 17ம் தேதி வெள்ளிக்கிழமை இரு தினங்கள் நடைபெற உள்ளது. நாளை 16ஆம் தேதி வியாழக்கிழமை முதல் கால பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுதினம் 17 ம் தேதிவெள்ளிக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் கலசம் திருத்தேரில் எழுந்தருளி வடம்பிடித்து நான்கு ரதவீதிகளில் அம்மன் உலா வருகிறார். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அது சமயம் பொதுமக்களும், ஆன்மீக பெரியோர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் தரிசிக்க அன்புடன் அழைக்கின்றோம் என்றார்.
ஸ்ரீ கோட்டை மாரியம்மனுக்கு இதுவரை தங்கத்தேர் மட்டுமே இருந்து வந்தது தற்போது மரத்திலான மிக கம்பீரமான திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல் மாநகர  ஆன்மீக பெரியோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து