ராமநாதபுரம் போக்குவரத்து ஆய்வாளரை கடித்து காயப்படுத்திய டிரைவர் கைது

புதன்கிழமை, 15 மே 2019      ராமநாதபுரம்
15 rmd news

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டு அவரின் கழுத்தில் கடித்து காயப்படுத்திய மினிவேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
     ராமநாதபுரம் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் நேற்று மாலை கேணிக்கரை பகுதியில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிக எடை ஏற்றி வந்த மினிசரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தினார். ஆனால், வாகனத்தில் வந்த டிரைவர் உச்சிப்புளி சேதுராமன் மகன் கர்ணன்(வயது52) என்பவர் வண்டியை நிறுத்தாமல் சென்றார். சிறிது தூரம் சென்று வண்டியை நிறுத்தி உள்ளார். பின் தொடர்ந்து வந்த ஆய்வாளர் விஜயகாந்த் அதிக பாரத்துட் விறகுகளை ஏற்றி வந்ததற்காக மினிசரக்கு வாகனத்தை பூட்டினார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் கர்ணன் ஆய்வாளர் விஜயகாந்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு முற்றியதில் டிரைவர் கர்ணன் ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு அவரின் கழுத்தில் கடித்து காயபடுத்தினார்.
   இதில் ஆய்வாளர் விஜயகாந்திற்கு கழுத்தில் ரத்த காயம் ஏற்பட்டதோடு, உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் உடன் இருந்த போலீசார் இருவரையும் பிரித்து ஆய்வாளரை மீட்டு அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கழுத்து பகுதியில் 5 தையல் போடப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் விஜயகாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குபதிவு செய்து மினிசரக்கு வாகன டிரைவர் கர்ணனை கைது செய்தார். பட்டபகலில் நடுரோட்டில் போக்குவரத்து ஆய்வாளரோடு தகராறில் ஈடுபட்டு கடித்து காயப்படுது;திய சம்பவம் ராமநாதபுரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து