ஆசிரியர் தகுதித்தேர்வு - தேதிகள் அறிவிப்பு

புதன்கிழமை, 15 மே 2019      தமிழகம்
TET exam 2019 05 15

சென்னை : ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் மாதம் 8, 9 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாளுக்கான தேர்வு வரும் ஜூன் -8 ம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், இரண்டாம் தாளுக்கான தேர்வு வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம்  தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்கு 1,83,341 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4,20,815 பேரும் என 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து