முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6 முதல் தொடங்கும் - மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

புதன்கிழமை, 15 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவு...

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நடப்பாண்டு முதல் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு மறுநாள் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.

கூடுதலாக இடம்...

www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 26-ம் தேதி...

மருத்துவப் படிப்புக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரம் இடங்களும், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 207 இடங்களும் உள்ளன. அரசு பல் மருத்துவ கல்லூரியில் வழக்கம் போல் 100 இடங்கள் உள்ளது.18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 45 இடங்கள் உள்ளன. ஜூன் மாதம் 26-ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து