முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா டெல்லிக்கு வரும் போது வெளிநபர் என சொல்லலாமா? அமித்ஷா கேள்வி

வியாழக்கிழமை, 16 மே 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் என்னை வெளிநபர் என்று சொன்னால், டெல்லிக்கு வரும் போது மம்தா பானர்ஜியை வெளிநபர் என்று சொல்லலாமா? என்று அமித் ஷா வினவியுள்ளார்.

வெளிநபரான அமித்ஷா மேற்கு வங்காளத்துக்கு வந்து, மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார் என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார். இந்நிலையில், கொல்கத்தாவில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமித்ஷா அதற்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஒரு தேசிய கட்சியின் தலைவர். பிரசாரம் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். இந்தியாவின் அங்கமான மேற்கு வங்காளத்துக்கு வரும் போது என்னை வெளிநபர் என்று சொல்கிறார்கள். என்ன பேச்சு இது?அப்படியானால், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர் மும்பைக்கோ, பெங்களூருவுக்கோ போகும் போது அவரை வெளிநபர் என்று சொல்லலாமா? மம்தா பானர்ஜி டெல்லிக்கு செல்லும் போது அவரையும் வெளிநபர் என்று சொல்லலாமா?

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், ஒரு வங்காளியைத்தான் முதல்வர் ஆக்குவோம். நானோ அல்லது இந்த மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவோ முதல்வராக மாட்டோம். நான் வாகன பேரணி சென்ற போது தாக்கப்பட்டேன். இதை சில ஊடகங்கள், நாங்கள்தான் மோதலை ஆரம்பித்தது போல் செய்தி வெளியிட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் எங்கள் வாகன அணிவகுப்பை தாக்கினர். ஆனால், இதை வேறுமாதிரி திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து