முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் - புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 16 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய...

தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வெயில் தாக்கம்...

மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து