முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை போட்டியில் எங்கள் பந்து வீச்சை மற்ற அணிகள் கவனமாக எதிர்கொள்வர் - புவனேஸ்வர் குமார்

வியாழக்கிழமை, 16 மே 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : உலகக்கோப்பையில் ஒவ்வொரு அணியும் இந்திய அணியின் பந்து வீச்சை யூனிட்டை கவனமாகத்தான் எதிர்கொள்ளும் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

19 விக்கெட்டுக்கள்...

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். இவர் புதுப்பந்திலும், டெத் ஓவரிலும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். கடந்த வருடம் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இவருடன் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இங்கிலாந்து ஆடுகளங்கள் மிகவும் ‘Flat’ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் மற்ற அணிகள் இந்தியாவின் பந்து வீச்சை மிகவும் கவனமாக எதிர்கொள்ளும் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

உடற்தகுதியிலும்...

இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு போதுமான அளவில் ஐபிஎல் பயிற்சி ஆட்டமாக அமைந்தது. கட்டுக்கோப்பாக பந்து வீசி, விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் தன்னம்பிக்கை தானாகவே உயரும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக பந்து வீசிய அதே ரிதமில் பந்து வீசுவது அவசியம். ஸ்லோவர் பால், நக்குல் பால் போன்ற வேரியேசன் பந்துகளை வீசுவதிலும், பந்து வீச்சில் வேகத்தை கூட்டுவதிலும் முன்னேற்றம் அடைந்துள்ளேன். அதேபோல் உடற்தகுதியிலும் முன்னேற்றம் அடைந்துள்ளேன்.

விரும்பவில்லை...

நாங்கள் சிறந்த பந்து வீச்சை கொண்ட அணியா? இல்லையா? என்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஏனென்றால், ஆடுகளத்தில் எங்களுடைய பந்துவீச்சு எப்படி வெளிப்படும் என்பதை பொறுத்துதான் அது அமையும். எங்களுடைய கடந்த சில வருட ஆட்டத்திறன் எங்களை பற்றி சொல்லும். இந்திய அணியின் பந்து வீச்சு படிப்படியாக சிறந்த வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. எந்தவொரு ஆடுகளத்திலும் இந்திய பந்து வீச்சால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.

வெளிப்படுத்துகிறோம்....

இந்திய அணியில் உள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பலத்தை, ஒரு அணியாக வெளிப்படுத்துகிறோம். ஆடும் லெவன் அணியில் யார் இடம்பிடித்தாலும் சிறப்பாக பந்து வீசுவது சிறப்பான விஷயம். ஒரு பந்து வீச்சு குழுவாக எந்த கண்டிசனிலும் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

கவனமாக எதிர்கொள்வர்...

இங்கிலாந்து ஆடுகளங்கள் ‘Flat’ ஆக இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தொடக்கம் மற்றும் டெத் ஓவர்களில் எங்களுடைய பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எதிரணிகள் கவனமாக எதிர்கொள்வார்கள். அன்றைய தினம் எங்களுடைய திட்டத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் எல்லா விஷயங்களும் அமையும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து