முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக தமிழக வாலிபர்கள் கைது

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
Image Unavailable

திருமலை, திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய விழுப்புரம் வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவில் விலை போவதால் இதனை வெட்டி கடத்தும் கும்பல் அதிக அளவில் உள்ளனர்.செம்மர கடத்தலை தடுக்க செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கல்யாண் டேம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செம்மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கொண்டிருந்ததை கண்டு அவர்களை சுற்றி வளைத்தனர். இதில் 2 வாலிபர்கள் சிக்கனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 10 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாதையன் மகன் ஆண்டி (30) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையன் மகன் தருமன் (32) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து