முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரீபியன் கிரிக்கெட் லீக்: வரலாறு படைத்த இர்பான் பதான்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரீபியன் டி20 தொடரில் விளையாட தேர்வாகி இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான். இதையடுத்து வெளிநாட்டு லீக்கில் விளையாட தேர்வாகியுள்ள முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பங்குபெற்றதில்லை...

இந்தியாவின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போல, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட சில நாடுகள் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் இந்திய வீரர்கள் யாரும் பங்குபெற்றதில்லை. அதாவது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளில் விளையாட, வீரர்களை அனுமதிப்பதில்லை.

முன்னாள் ஆல்ரவுண்டர்...

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் இடம்பிடித்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், கரீபியன் பிரிமீயர் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

வரைவுப்பட்டியலில்...

இருபது நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியலில் பதானும் இடம்பெற்றுள்ளார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி யில், பதானை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது தெரியவில்லை.

பெருமையை பெறுவார்...

ஏதாவது ஒரு அணி ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸில் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து