மெக்காவின் முதல் புகைப்படம் ரூ. 2 கோடிக்கு ஏலம் போனது

சனிக்கிழமை, 18 மே 2019      உலகம்
mecca first photo 2019 05 18

ஜகார்தா : இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

பின்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் 1884-1885 ஆம் ஆண்டுகளில் தனது அனுபவம் குறித்து கடந்த 1889ம் ஆண்டில் புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்திற்காக மெக்காவை முதன்முதலில் அப்துல் கபார் என்பவர் புகைப்படம் எடுத்தார். மேலும் அங்கு வாழ்ந்த சில மக்களையும் பாரம்பரியம் மாறாமல் புகைப்படம் எடுத்திருந்தார். 1884-1885 ஆண்டுகளில் மெக்காவில் தனது அனுபவங்களை கபார் பதிவு செய்தார்.

1886 மற்றும் 1889-ம் ஆண்டுகளுக்கு இடையில், மெக்கா மற்றும் அதன் மக்கள் குறித்து 250 புகைப்படங்கள் மற்றும் ஹஜ் வரௌம் இஸ்லாமியர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து உள்ளார். கபாரின் படைப்பு கலை திறமையை வெளிக்காட்டியதாக ஹர்கிரன்ஜே தனது புத்தகத்தில் அதனை போட ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் மெக்காவின் புகைப்படம் இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தப் புகைப்படம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

கபாரின் எஞ்சியுள்ள வெளியிடப்படாத படைப்புகள் அல்லது குறைந்தபட்சம் அவருக்குக் கூறும் படங்கள், நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக் கழக நூலகத்தில் ஸ்னொக் ஹர்கிரன்ஜே -ன் காப்பகங்களில் பாதுகாக்கப்படுகிறது டச்சு புகைப்படக்காரரின் பெயரில் படைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து