அமெரிக்க பல்கலை டாக்டர் மீது 177 மாணவர்கள் பாலியல் புகார்

சனிக்கிழமை, 18 மே 2019      உலகம்
doctor secual abuse 2019 05 18

நியூயார்க் : அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக் கழக மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்த டாக்டர் மீது 177 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் டாக்டர் ஆக பணிபுரிந்தவர் ரிச்சர்ட் ஸ்டாரஸ். இவர் கடந்த 1978 முதல் 1998-ம் ஆண்டு வரை பணியாற்றினார். 2005-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தற்போது இவர் மீது மாணவர்கள் செக்ஸ் புகார் கூறியுள்ளனர். இவர் பணியில் இருந்த 20 ஆண்டுகளில் பல மாணவர்களிடம் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் 440 முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக ஊழியர்களுடன் செக்ஸ் உறவு  வைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை 177 முன்னாள் மாணவர்கள் இவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. 12 மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து