பிரக்யாவின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் - ஷீலா தீட்சித் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 18 மே 2019      இந்தியா
Sheila Dikshit 2018 7 4

புது டெல்லி : மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியுள்ள போபால் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா தாக்குரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பிரக்யா தாக்குர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற நபர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர். அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா தாக்குர், சாத்வி என்று அழைக்கப்படுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

பிரக்யா தாக்குரின் பேச்சை பா.ஜ.க. தலைவர்கள் கண்டிக்கவில்லை. குறிப்பாக, மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பிரக்யா தாக்குரின் பேச்சு குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.

பிரக்யா தாக்குரை பா.ஜ.க. வேட்பாளராக தேர்வு செய்த பிரக்யாவின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் - ஷீலா தீட்சித் வலியுறுத்தல்நரேந்திர மோடியும், அமித் ஷாவும், மகாத்மா காந்திக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு பொறுப்பேற்க வேண்டும். போபால் தொகுதியில் போட்டியிடும் பிரக்யா தாக்குரின் வேட்பு மனுவைத் திரும்பப் பெற மோடியும், அமித் ஷாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால், அவர்களின் தேசப்பக்தி, தேசியவாதம் பேச்சுகள் வெற்றுப் பேச்சுகளாகி விடும். பிரக்யா தாக்குரின் பேச்சை காங்கிரஸ் கட்சி கண்டிப்பதுடன், இது போன்ற நபருக்கு எதிராக வாக்களித்து, பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என்று ஷீலா தீட்சித் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து