முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது

சனிக்கிழமை, 18 மே 2019      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீமுஷ்ணம் : சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை முதல் ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.   

வெயில் தாக்கம்...

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது ஏரியில் 45.45 அடியில் தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 41 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

இதற்கிடையே கோடையின் காரணமாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்து வருகிறது.

500 கனஅடி தண்ணீர்...

வீராணம் ஏரியில் 39 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நீர்மட்டம் அதற்கு கீழே குறையாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து