இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை வெளியிட்டது ஐ.சி.சி.

சனிக்கிழமை, 18 மே 2019      விளையாட்டு
ICC 2019 05 18

லண்டன் : இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது ஐசிசி.

வரும் 30-ம் தேதி...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ஜூலை 14-ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இணையதளத்தில்...

பிரபலமான தொடர்களின் போது அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிகாரப்பூர்வமான பாடல்கள் வெளியிடப்படும். அதன்படி இந்த உலகக்கோப்பைக்கான பாடலை லாரின் ருடிமென்டல் பாடியுள்ளனர். இந்த பாடல் சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து