உங்கள் வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும்: பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
PM Modi 2019 04 11

புது டெல்லி, உங்கள் வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. நேற்று நடந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு செய்தி ஒன்றை தெரிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இன்று(நேற்று) 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த கடைசி கட்ட ஓட்டுப் பதிவில் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்று வாக்காளர்களை வலியுறுத்துகிறேன். உங்கள் ஒரு வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் தீர்மானிக்கும். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என்று நானும் நம்புகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து