வெளிநாடு செல்லுங்கள்-அதே நேரம் இந்தியாவையும் சுற்றி பாருங்கள்: பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
pm modi talk 2019 04 10

கேதார்நாத், இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே வேளையில் இந்தியாவில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். நேற்று காலை தியானத்தை முடித்து, மீண்டும் சாமி தரிசனம் செய்தார். மோடி வருகையையொட்டி அங்கு ஏராளமான பக்கதர்கள் குவிந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.பின்னர் மோடி கூறுகையில்,

நம்முடைய நாட்டு மக்கள் நமது நாட்டை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வது குறித்து எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அவர்கள் நம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து