மேற்கு வங்கத்தில் நடந்த செயல்கள் உ.பி.யில் நடக்கவில்லை: யோகி

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
yogi-adityanath 2018 10 31

கோரக்பூர், தேர்தல் என்ற ஜனநாயக திருவிழாவில் மக்கள் பங்கேற்றது பாராட்டத்தக்கதாகும் என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் வாரணாசி உட்பட 13 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தேர்தல் ஜனநாயகத்தின் திருவிழா. அந்தவகையில் வாக்காளர்கள் திரண்டு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியது பாராட்டுக்குரியது. உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தை நீங்கள் ஒப்பீட்டு பார்த்தீர்கள் என்றால், 6-ம் கட்ட தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் உ.பி.யில் நடந்ததாக எந்த தகவலும் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து