பாராளுமன்ற தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக் கூடாது: நிதிஷ்குமார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
nitish-kumar 2018 12 02

லக்னோ, பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாராளுமன்ற தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக் கூடாது என்று பேட்டியில் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் இடையே அதிக நாட்கள் இடைவெளியும் தேவையில்லை. தேர்தலை குறைந்த நாட்களில் நடத்தும் விவகாரம் பற்றி அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து