மேற்கு வங்க தேர்தலில் வன்முறை: நாட்டு வெடிகுண்டு வீச்சு, கார்கள் நொறுங்கின

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
West Bengal election Violence-2019 05 19

கொல்கத்தா, மேற்கு வாங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்களில் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் பா.ஜ.க. வேட்பாளர்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன.

பாராளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட தேர்தல் நேற்று நடந்தது. மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க. கட்சியின் 2 வேட்பாளர்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதே போல் வடக்கு கொல்கத்தாவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் பூத்தை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான வன்முறை நிகழ்ந்தது. இதனைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து