முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் மறுவாக்குபதிவு வடுகபட்டி 63.91 பாலசமுத்திரம் 79.76 சதவிகிதம் வாக்குபதிவு

திங்கட்கிழமை, 20 மே 2019      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி  மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. அதில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் வடுகபட்டி பேரூராட்சிக்குட்பட்ட  சங்கரநாராயணன் நடுநிலைபள்ளி வாக்குசாவடியிலும், பாலசமுத்திரத்தில் கம்மவர் சரஸ்வதி நடுநிலைபள்ளியிலும் மே 19ம் தேதியன்று  மறுவாக்குபதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நேற்று இந்த வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர்களுக்கு நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இவ்வாக்குசாவடிகளில் தேனி பாராளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற கழக வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் மயில்வேல் ஆகியோர் மறுவாக்குப்பதிவினை பார்வையிட்டனர். இம்மறுவாக்கு பதிவில் பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி சங்கரநாராயணன் பள்ளி வாக்குசாவடியில் 63.91 சதவிகிதமும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவர் சரஸ்வதி நடுநிலைபள்ளி வாக்குசாவடியில் 79.76 சதவிகிதமும் வாக்கு பதிவானது. மறுவாக்குபதிவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து