முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      உலகம்
Image Unavailable

மெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா . ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர் மூன்று முறை பார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 1975 ஆண்டு பார்முலா ஒன் கார் பந்தையத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இவருக்கு 1976-ம் ஆண்டு விபத்திற்கு பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அந்த விபத்தின் போது அவரது பெராரி கார் கடும் சேதமடைந்ததுடன், அவருக்கும் எழும்பு முறிவு, தீக்காயம் உட்பட உடலில் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டன. மெதுவாக அதிலிருந்து மீண்டு, மீண்டும் பார்முலா ஒன் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன்பின்னர் 1997 முதல் 2005 வரை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்திலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து