முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது - மெகபூபா முப்தி வருத்தம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
Image Unavailable

 ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.  

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. 

வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது. 

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்கிறது என ஆதாரங்கள் இருந்தபோதும் தேர்தல் ஆணையம் அமைதி காப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார். 

மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து கூறுகையில், ‘பாஜக வெற்றி பெற்றால் அது மக்களின் முடிவு. இதனை யாரும் தடுக்க முடியாது’ என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து