முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      விளையாட்டு
Image Unavailable

கவுகாத்தி : இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

6 நாடுகள்...

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. ஆண்களுக்கு 10 எடைப்பிரிவிலும், பெண்களுக்கு 8 எடைப்பிரிவிலும் நடைபெறும் இந்த போட்டியில் 6 நாடுகளை சேர்ந்த 200 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் பிரிஜேஷ் யாதவ், சஞ்சய் (இருவரும் 81 கிலோ), நமன் தன்வார், சன்ஜீத் (இருவரும் 91 கிலோ), சதீஷ்குமார், அதுல் தாகூர் (இருவரும் 91 கிலோவுக்கு மேல்) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

அரையிறுதிக்கு...

பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் லவ்லினா போர்கோஹைன், அஞ்சலி (இருவரும் 69 கிலோ), பாக்யபாதி கசாரி, சவீட்டி போரா (இருவரும் 75 கிலோ) அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேறினார். அவர் அரைஇறுதியில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தெலுங்கானா வீராங்கனை நிஹாத் ஜரீனை சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து