ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா

புதன்கிழமை, 22 மே 2019      உலகம்
J17  fighter aircraft 2019 05 22

பெய்ஜிங் : பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.

சீனா, பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்குவது உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் போர் விமானங்கள் விற்பனைக்கு இருநாடுகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி, சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஒரு இன்ஜின் கொண்ட ஜே.எப். -17 ரக போர் விமானங்கள் தயாரிக்கும் பணியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியது. 2007-ம் ஆண்டு முதல் முறையாக சீனா, பாகிஸ்தானுக்கு ஜே.எப் -17 ரக போர் விமானங்களை வழங்கியது.

இந்த நிலையில், இப்போது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜே.எப். 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. பல பயன்பாடுகளுக்கு இந்த வகை போர் விமானங்களை பயன்படுத்த முடியும் என்று சீனாவின் வான் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து