முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

புதன்கிழமை, 22 மே 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. இவற்றில் 25 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

தலிபான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீதான கடும் நடவடிக்கையை ஆப்கன் ராணுவம் முடுக்கி விட்டு அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

காந்தஹார் மாகாணத்தில் ஷாவாலி கோட் மாவட்டத்தின் கரீ பகுதியில் பதுங்கி இருந்த தலிபான் பயங்கரவாதிகளை குறி வைத்து ராணுவம்  அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகளின் வாகனங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலை தொடர்ந்து காந்தஹாரில் தலிபான்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. குண்டூஸ் மாகாணத்தின் கான் அபாத் மற்றும் அதையொட்டிய அக்டாஷ் மாவட்டங்களில் பதுங்கி இருந்த தலிபான் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்  12-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ராணுவ தரப்பில் எந்தவொரு சேதமும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

நங்கர்ஹார் மாகாணத்தின் சபார்ஹர் மாவட்டத்தில் மலைப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 4 பயங்கரவாதிகள் பலியாகினர். மற்றவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஓட்டம் எடுத்து விட்டனர். ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து