சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஆந்திராவில் 12 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 22 மே 2019      இந்தியா
summer heat 2019 05 22

நகரி : ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டுக்குள் அனல் காற்று வருவதால் மக்கள் தூங்க முடியவில்லை. வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விஜயநகரத்தில் 2 பேரும், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, சித்தூர், கடப்பா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகினர். மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட 340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டம் பாதிரி பேட்டில் 114.26 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. நெல்லூர் வெங்கடகிரியில் 113.36 டிகிரியும், சித்தூர் தொட்டம்பேடு, குண்டூர் மச்சவரத்தில் 113.18 டிகிரியும், கடப்பா மாவட்டத்தில் முட்டனூரில் 113 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து