தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருந்தால் மிரட்டல் விடுக்கிறார் மாஜி அமைச்சர்

புதன்கிழமை, 22 மே 2019      இந்தியா
former minister bully 2019 05 22

பாட்னா : பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க.வே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வாக்கு இயந்திரத்தில் பாரதிய ஜனதா தில்லுமுல்லு செய்து இருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வகா கூறியதாவது:-

தேர்தல் கருத்து கணிப்பு என்ற பெயரில் பாரதிய ஜனதா மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான எண்ணத்தை உருவாக்க முயற்சித்துள்ளது. பாரதிய ஜனதா எப்படி எல்லாம் மக்கள் மனநிலையை மாற்றும் விளையாட்டுகளை கையாளும் என்பது எங்களுக்கு தெரியும். பா.ஜ.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் அந்த கட்சிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்.

வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஓட்டு எந்திரங்கள் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. முஷாபர்பூரில் ஓட்டல் அறையில் ஓட்டு எந்திரங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற வி‌ஷயங்கள் பல சந்தேகத்தை எழுப்புகிறது. மக்களின் உரிமையை பறிக்கும் செயலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் தொண்டர்கள் ஓட்டு இயந்திரத்தில் மோசடி நடக்காமல் தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் உரிய ஆயுதங்களை கையில் ஏந்தி செல்வார்கள். தில்லுமுல்லு நடந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து