முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை: உஷார் நிலையில் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை

புதன்கிழமை, 22 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று நாடு முழுவதும் எண்ணப்படவுள்ள நிலையில் மாநிலங்கள் அனைத்தும் உஷார் நிலையில் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கடும் போட்டி

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம் அனைத்து மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

வன்முறைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.-க்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து