உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி

புதன்கிழமை, 22 மே 2019      விளையாட்டு
india team travel england 2019 05 22

புதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர். வீரர்களின் புகைப்படங்களை நேற்று அதிகாலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தென்னாப்பிரிகாவுடன்...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்கு மே 25-ந்தேதி நியூசிலாந்தையும், மே 28-ந்தேதி வங்காளதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது.

பி.சி.சி.ஐ. வெளியீடு...

உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டது. வீரர்கள் புறப்படும்போது எடுத்த  புகைப்படங்களை பிசிசிஐ நேற்று அதிகாலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் வீரர்கள் உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் புறப்படுவது போன்று உள்ளனர். மேலும் ரோகித் ஷர்மா, ஹர்தீப் பாண்டியா, பும்ரா, சாஹல் உள்ளிட்டோரும் புறப்படும் முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் விமானம்...

மும்பையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக வீரர்கள் லண்டன் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, முந்தைய போட்டிகளை விட இந்த உலகக்கோப்பை தொடர் மிகவும் சவாலானது என்றும், எந்த அணியும் அதிர்ச்சியை அளிக்கலாம் எனவும் கூறினார். கோப்பையை வென்று இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து