விமானத்தில் சிறுமியுடன் உல்லாசம் அமெரிக்க தொழிலதிபர் கைது

வியாழக்கிழமை, 23 மே 2019      உலகம்
Stephen-Bradley-Mell 2019 05 23

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லே மெல். தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் சொந்தமாக சில விமானங்களை வைத்துள்ளார். ஸ்டீபன் பிராட்லே மெல்லுக்கும் 15 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த சிறுமிக்கு விமானத்தை இயக்க பயிற்சி அளிப்பதாக கூறி தனது சொந்த விமானத்தில் அவரை அழைத்து சென்றார்.

விமானத்தில் ஸ்டீபன் பிராட்லே மெல்லும், சிறுமியும் மட்டும் இருந்தனர். நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஸ்டீபன் பிராட்லே மெல், விமானம் தானாக இயங்கும்படி செய்து விட்டு சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்தார். இந்த சம்பவம் ஸ்டீபன் பிராட்லே மெல்லின் மனைவியின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின் போது ஸ்டீபன் பிராட்லே மெல், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ஸ்டீபன் பிராட்லே மெல்லுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து