பா.ஜ.க. வெற்றி: பிரதமர் மோடிக்கு சுஷ்மா வாழ்த்து

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
BJP Victory Sushma 2019 05 23

புது டெல்லி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

17-வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் வெற்றியை உறுதி செய்துள்ள பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து