பேட்ஸ்மேன் சதம் அடித்தபோதிலும், அணி தோற்ற உணர்வுதான் தேர்தல் முடிவு:சசி தரூர்

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
Shashi Tharoor 2018 5 15

திருவனந்தபுரம் : பேட்ஸ்மேன் சதம் அடித்தபோதிலும், அணி தோற்றால் என்ன உணர்வு இருக்குமோ?, அதேபோல்தான் காங்கிரஸ் தோல்வி உள்ளது என சசி தரூர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 340-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சியமைக்கிறது. வடமாநிலங்களில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் சுருட்டிய பாஜக, தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை.

காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் படுதோல்வியடைந்துள்ளது. அதேவேளையில் கேரளாவில் 15 தொகுதிகளுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வெற்றிபெறும் தருவாயில் உள்ளார்.

தான் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் ‘‘என்னுடைய முன்னிலை 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் உள்ளது. பேட்ஸ்மேன் சதம் அடித்த போதிலும், அவனுடைய அணி தோல்வி அடைந்தால் எப்படி இருக்குமோ? அதே உணர்வுதான் உள்ளது. இந்த கசப்பான எமோசனில் இருந்து வெளியேற சற்று காலம் தேவைப்படும்’’ என்று பதிவிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து