முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தோனேசிய அதிபர் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      உலகம்
Image Unavailable

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த அறிவித்தது. இதில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபின்யான்டோ குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபோவோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். அப்போதும், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து