முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, வெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், திருப்பெரும்புதூர் கிராமம்,  நெமிலி மெயின் ரோடு, விநாயகா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் 26.3.2019 அன்று தனது சொந்த வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது, விஷ வாயு தாக்கி மயக்கமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், அவரை காப்பாற்றச் சென்ற அவருடைய மகன்கள் கார்த்தி மற்றும் கண்ணன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுரதாபிசி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் ஆகிய ஆறு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மன்னை நகரில் இயங்கி வரும் தனியார் வெடிபொருள் உற்பத்தி கூடத்தில் 27.3.2019 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த சிங்காரவேல், வீரையன், மோகன், பாபு, சுரேஷ் மற்றும் அறிவுநிதி ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து  நான் 27.3.2019 அன்றே இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன். வெடி விபத்து மற்றும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 12 நபர்களின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு தற்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து