முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தினகரனை நிராகரித்து விட்டனர்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிடிவி தினகரனை தமிழக மக்களும், அ.தி.மு.க.வினரும் நிராகரித்து விட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ராஜினாமா செய்வாரா ?

சென்னை எழும்பூரில் ஆதித்தனார் சிலைக்கு அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இந்த தேர்தலை பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல ஜெயலலிதாவின் அரசு தொடர தமிழக மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகாரமாக தான் பார்க்கிறோம். துரைமுருகன் ஜூன் 3ம் தேதி திமுக ஆட்சி அமைக்கும் என்றார். நான் இது நடக்காது. நடக்கவில்லை என்றால் அவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜினாமா செய்வாரா என்று சவால் விடுத்தேன். இப்போது ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறாரா  துரைமுருகன். எங்கள் ஆட்சி தொடரும். இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

மிகப்பெரி வெற்றி...

ஆர்கேநகரில் மாயை ஏற்படுத்தி வளைத்தது பணத்தை செலவு செய்து தமிழகத்தையும் வளைத்துவிடலாம் என நினைத்தார் தினகரன். அவர் படு தோல்வி அடைந்துள்ளார். எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த இயக்கம். ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட இந்த இயக்கம் நாங்கள்தான் என்பதை இந்த தேர்தல் நிருபித்துள்ளது. எனவே இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக தான் தினகரன் உள்ளார். அதிமுக மெகா கூட்டணி அமைத்து நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் தெரிவித்தோம். மக்களும் அதனை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு தவறான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் செய்துவிட்டது. அது எடுபட்டுவிட்டது. தமிழக பாஜக தலைவர் கூறியது போல தமிழக சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து கொண்டு வெளியே வருவது போல ஸ்டாலின் நாடாளுமன்றத்தில் சட்டையை கழட்டி வெளியே வராமல் இருந்தால் சரி.

தவறான பிரச்சாரம்...

மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் வெற்றி முதலை கையில் கிடைத்த தேங்காயை போல தான். முதல்வர், துணை முதல்வர், நாங்கள் உட்பட எல்லோரும் சொன்னது ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் நிறைவேறாது என நாங்கள் கூறியது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். இது தற்காலிக வெற்றி. இனி வரும் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.

தலைமை தான்...

இந்த முறை எதிர்க்கட்சியின் பிரச்சாரம் தவறுதலாக எடுபட்டுவிட்டது. எல்லா நாட்களும் அமாவாசை சாப்பாடு கிடைக்காது. நாடளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பாஜ கூட்டணி தொடருமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். இது கொள்கை முடிவு என்பதால் இது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.
இவ்வாறு தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து