சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள்: முதல்வரை சந்தித்து ஆசி

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      தமிழகம்
cm-assembly election-candidates 2019 05 24 copy

சென்னை, சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதல்வருடன்...

நாடாளுமன்றத்தேர்தலோடு 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18 ம் தேதி நடைபெற்றது. மேலும் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்,கடந்த 19ம்தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இதில் விளாத்திக்குளத்தில் வெற்றி பெற்ற சின்னப்பன், சோளிங்கர் தொகுதியில்  வெற்றி பெற்ற சம்பத், நிலக்கோட்டை தொகுதி தேன்மொழி ஆகியோர் நேற்று முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

துணை முதல்வருடன்...

இதைத்தொடர்ந்து துணைமுதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, அண்ணாதொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் தாடி ம.ராசு, அரக்கோணம் சு.ரவி எம்எம்ஏ, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து