உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை 262 ரன்னில் சுருட்டியது ஆப்கானிஸ்தான்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      விளையாட்டு
Afghan team 2019 05 24

Source: provided

லண்டன் : உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் பாபர் ஆசம் சதம் அடித்த போதிலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பேட்டிங் தேர்வு...

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம்-உல்-ஹக் 32 ரன்னும், பகர் ஜமான் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 108 பந்தில் 112 ரன்கள் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 59 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.

ரஷ்த்கான், தவ்லாத்...

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47.5 ஓவரில் 262 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி மூன்று விக்கெட்டும், ரஷித் கான், தவ்லாத் ஜத்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து