விராட் கோலி மனிதரே இல்லை: மே.தீவுகள் முன்னாள் வீரர் லாரா

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      விளையாட்டு
Brian lara 2019 05 24

Source: provided

புதுடெல்லி : விராட் கோலி மனிதரே இல்லை என்றும் அவர், ஒரு ரன் மிஷின் என்றும் மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான...

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய லாரா,  80களிலும், 90களிலும் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு மாற்றாக வித்தியாசமான கிரிக்கெட் வீரராக விராட் கோலி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

உடல் தகுதிக்கு...

மேலும் விராட் கோலி, தனது உடல் தகுதிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்துவருகிறார் எனவும் கோலி ஒரு ரன் மிஷின் போல தான் என்றும் பிரைன் லாரா பாராட்டி உள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட முடியாது என்றும் ஆனால் கோலி பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார் என்றும் பிரையன் லாரா புகழ்ந்து கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து