இங்கிலாந்து கவுண்டி போட்டியை எதிர்பார்த்திருக்கிறார் அஸ்வின்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      விளையாட்டு
Ashwin 2019 05 24

Source: provided

லண்டன் : கவுண்டி தொடரில் இந்த ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ஆடும் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின், அந்த போட்டியை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

20 விக்கெட்கள்...

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இப்போது இந்திய அணிக்காக, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் அவர், கடந்த 2017 ஆம் வருடம் இங்கிலாந்தில் நடந்த கவுண்டி தொடரில், வொர்சஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார். 4 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில் இப்போது நாட்டிங்காம்ஷைர் அணிக்காக அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த அணியில், ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பேட்டின்சன் விலகியதை அடுத்து, அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சரியான போட்டியாக....

இதுபற்றி அஸ்வின் கூறும்போது, ‘’கவுண்டி போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியானது. முக்கியமான டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இதற்கு முன் நடந்த தொடரில் ரசித்து விளையாடினேன். இப்போது அதே ஆவலுடன் இருக்கிறேன். அங்கு கிரிக்கெட் விளையாடுவது சிறப்பான, சரியான போட்டியாக இருக்கும்’’ என்றார்.  ஜூன் மாத இறுதியில் இந்த தொடரில் அவர் விளையாட இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் ரஹானே, ஏற்கனவே கவுண்டி தொடரில் ஹாம்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் கடந்த போட்டியில் சதம் அடித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து