குஜராத்தில் இன்று தாயிடம் ஆசி பெறுகிறார் பிரதமர் மோடி

சனிக்கிழமை, 25 மே 2019      இந்தியா
pm modi mother blessing 2019 05 25

புது டெல்லி : பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று குஜராத் சென்று தனது தாயிடம் ஆசிபெறுகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று குஜராத் சென்று தனது தாயிடம் ஆசி பெறுகிறார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை (இன்று) குஜராத் மாநிலம் செல்கிறேன். அங்கு எனது தாயை சந்தித்து அவரது ஆசியை பெறுகிறேன். மேலும் நாளை மறுதினம் (நாளை) வாரணாசி தொகுதிக்கு சென்று எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து