இந்திய ஓப்பன் குத்துச்சண்டை: மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றார்

சனிக்கிழமை, 25 மே 2019      விளையாட்டு
Mary Kom win gold medal 2019 05 25

கவுகாத்தி : இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

12 பதக்கங்கள்...

2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டிக்கான பந்தயங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதில் இந்தியா மொத்தம் 12 தங்கப்பதக்கங்களை அள்ளியது. 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனது வசமாக்கினார்.

சரிதா தேவிக்கு...

மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி (60 கிலோ) 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளில் சரிதா தேவி வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மேலும், 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் மனிஷ் கவுசிக்கை வென்று தங்கம் வென்றார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து