பிரதமர் நரேந்திர மோடிக்கு போனில் வாழ்த்து தெரிவித்த இம்ரான்கான்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
Imran Khan 2019 04 10

புது டெல்லி : இந்தியாவின் பிரதமராக 2-வது முறையாக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

நடந்து முடிந்த 17-வது பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வெற்றிக்கு பின்னர், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின், சீன ஜனாதிபதி ஜீஜின் பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால், நேற்று இந்திய பிரதமர் மோடியுடன் நேரடியாக போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து இம்ரான்கான் பேசியுள்ளார். அப்போது, இருநாடுகள் இடையில் ஒற்றுமை நிலவ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியாக ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து